Images
  • train (2)
    படம்: REUTERS

மெக்சிக்கோ சிட்டி : பாலத்தில் இருந்து தடம் புரண்டது ரயில் - 15 பேர் மரணம், 70 பேர் காயம்

மெக்சிக்கோ சிட்டியில் உள்ள ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு சாலையில் விழுந்ததில் 15 பேர் மாண்டனர்.

மேலும் 70 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நேற்று இரவு நடந்தது.

அது தொடர்பான காணொளிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Metro-12 பாதையில் ரயில் தடம் புரண்டதாகவும், ரயில் சாலையில் இருந்த கார்கள் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க விரைந்து செயல்பட்டனர்.

விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Reuters 

Top