Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாலிவுட் பாணியில் கடத்தலை அதிரடியாக முறியடித்த அதிகாரிகள்

மெக்சிகோவில், போதைப் பொருளை விரைவுப் படகில் கடத்திச் சென்ற சந்தேக நபர்களை, கடற்படை அதிகாரிகள் துரத்திப் பிடித்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -

மெக்சிகோவில், போதைப் பொருளை விரைவுப் படகில் கடத்திச் சென்ற சந்தேக நபர்களை, கடற்படை அதிகாரிகள் துரத்திப் பிடித்துள்ளனர்.

போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை ஹெலிகாப்டரில் துரத்திச் சென்று அதிகாரிகள் முடக்கினர்.

கடந்த திங்களன்று நடந்த அந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

மேற்குப்புறக் கடலோரப் பகுதியிலுள்ள டொப்போலோ பாம்ப்போ என்னுமிடத்துக்கு அருகே அந்தச் சம்பவம் நடந்தது.

வேவுத் தகவல் மூலம் கடத்தல் சம்பவம் பற்றி அறிந்த கடற்படை அதிகாரிகள், ஹெலிகாப்டரில் சென்று படகை நிறுத்தக் கோரினர்.

ஆனால், படகிலிருந்தோர் அதைப் பொருட்படுத்தாமல், வேகமாக ஓட்டிச் சென்றனர்.

பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து கடற்படை வீரர்கள் கயிற்றின்மூலம் படகுக்குள் குதித்துப் படகை முடக்கினர்.

படகில் இருந்த 15 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மோப்ப நாயின் உதவியோடு படகைச் சோதனையிட்டதில், படகின் உட்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோகிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் விற்பனையாகும் போதைப் பொருள்களில் பெரும்பகுதி, மெக்சிகோவிலிருந்தே செல்வதாக வாஷிங்டன் குறைகூறி வருகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்