Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற பாலர்பள்ளி குண்டர் கும்பலின் பிடியில் சிக்கியது

அதிர்ஷ்டம் துரதிஷ்டமானது...

வாசிப்புநேரம் -
அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற பாலர்பள்ளி குண்டர் கும்பலின் பிடியில் சிக்கியது

(படம்: Pixabay)

அதிர்ஷ்டம் துரதிஷ்டமானது...

மெக்சிகோவில் அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரு பாலர்பள்ளி 950,000 டாலர் வென்றபிறகு குண்டர் கும்பலின் மிரட்டலுக்கு ஆளானது.

சுமார் 24 மாணவர்களைக் கொண்ட அந்த பாலர்பள்ளி சென்ற ஆண்டு செப்டம்பரில் அதிர்ஷ்டக் குலுக்கை வென்றது.

பரிசுத் தொகையை நிர்வகிக்கும் பணி மாணவர்களின் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது.

அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற தகவல் வெளியானதும், குண்டர் கும்பல் ஒன்றின் மிரட்டல் தொடங்கியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

அந்தப் பணத்தைக் கொண்டு கும்பலுக்கு ஆயுதங்களை வாங்கிக் கொடுக்குமாறு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தனர் பெற்றோர்கள்.

சென்ற மார்ச் மாதம் ஒரு தந்தை அந்தக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்ற மாதம் பெண்களும் பிள்ளைகளும் தாக்கப்பட்டதாக BBC சொன்னது.

அதனால் ஊரைவிட்டே ஓடவேண்டிய நிலைக்கு அந்தக் குடும்பங்கள் தள்ளப்பட்டன.

உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை என்று அவர்கள் வருந்துகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்