Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோ: சவப்பெட்டியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்

மெக்சிக்கோவில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சவப்பெட்டியிலிருந்து தமது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மெக்சிக்கோவில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சவப்பெட்டியிலிருந்து தமது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று, குற்றச்செயல் கும்பல்களின் வன்முறை ஆகியவற்றால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் மாண்டதை எடுத்துக்காட்டும் வகையில் அவர் அவ்வாறு செய்தார்.

தங்க சவப்பெட்டி ஒன்றில் திரு. கார்லோஸ் மயோர்கா பிரசாரக் கூட்டத்திற்கு வந்தார்.

அரசியல்வாதிகளின் மெத்தனப் போக்கால் மக்கள் மடிவதாக எடுத்துக்கூறுவது தமது நோக்கம் என்றார் அவர்.

வன்முறை, COVID-19 கிருமித்தொற்று ஆகியவை குறித்து அரசியல்வாதிகள் மௌனமாக இருந்துள்ளதாக அவர் கூறினார்.

கிருமித்தொற்றால் அங்கு மாண்டோரின் எண்ணிக்கை
200,000-ஐக் கடந்துள்ளது.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்