Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோ : பிளாஸ்டிக் பைகளில் 29 சடலங்கள்

மெக்சிக்கோ தடயவியல் துறை அதிகாரிகள் கிணற்றின் அடிப்பகுதியிலிருந்து 29 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மெக்சிக்கோ : பிளாஸ்டிக் பைகளில் 29 சடலங்கள்

படம்: AFP

மெக்சிக்கோ தடயவியல் துறை அதிகாரிகள் கிணற்றின் அடிப்பகுதியிலிருந்து 29 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அந்தச் சடலங்கள் மெக்சிக்கோவின் குவாடலஜரா (Guadalajara) பகுதியில் இருந்ததாகவும் அவை 119 பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த மாதத் தொடக்கத்தில் அந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இன்னும் அதிகச் சடலங்கள் இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 13 முழு சடலங்களும், 16 சிதைந்த சடலங்களும் கிடைத்துள்ளன. அவற்றில் 27 ஆண்கள், 2 பெண்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

மெக்சிக்கோவில் போதைப் பொருள் தொடர்பாக வன்முறை சம்பங்கள் நடந்துவருகின்றன, அதனால் பல கொலைக் குற்றங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கிடைத்துள்ள சடலங்களுக்கும் போதைப் பொருள் தொடர்பான வன்முறைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்