Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமிப்பரவலால் உலகில் குறைந்திருக்கும் புலம்பெயர்ந்வோர் எண்ணிக்கை

கொரோனா கிருமிப்பரவல் சூழலால் 2019, 2020 ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலால் உலகில் குறைந்திருக்கும் புலம்பெயர்ந்வோர் எண்ணிக்கை

(படம்: AFP)

கொரோனா கிருமிப்பரவல் சூழலால் 2019, 2020 ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது.

அது ஊகிக்கப்பட்டதைவிட 30 விழுக்காடு குறைவாக இருந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் புள்ளிவிவரப்படி, சுமார் 281 மில்லியன் பேர் தங்கள் தாய்நாட்டைவிட்டு வேறு நாடுகளில் வசிக்கின்றனர்.

"International Migration 2020" என்ற ஆய்வில் அந்தத் தகவல்களை நிறுவனம் வெளியிட்டது. அதில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோரில் மூன்றில் இரு பங்கினர், 20 நாடுகளில் மட்டுமே வசித்ததாகக் கூறப்பட்டது.

ஆக அதிகமான இடம்பெயர்ந்தவர்களைக் கொண்ட நாடுகள்:

  1. அமெரிக்கா - 51 மில்லியன் பேர்
  2. ஜெர்மனி - 16 மில்லியன் பேர்
  3. சவுதி அரேபியா - 13 மில்லியன் பேர்
  4. ரஷ்யா - 12 மில்லியன் பேர்
  5. பிரிட்டன் - 9 மில்லியன் பேர்

ஆக அதிகமானோர் இடம்பெயர்ந்த நாடு:

இந்தியா - 18 மில்லியன் பேர் மற்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்