Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் உரிமையை நிராகரிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்கும் வழிகள் குறித்து வாஷிங்டன் ஆராயவுள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் உரிமையை நிராகரிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

படம்: Courtesy of Muchlis Jr/Indonesian Presidential Palace/Handout via REUTERS

தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்கும் வழிகள் குறித்து வாஷிங்டன் ஆராயவுள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கூறியுள்ளார்.

அந்த சர்ச்சைக்குரிய கடல்பகுதியில் சீனா உரிமை கோருவதை அமெரிக்கா நிராகரிப்பதாக அவர் சொன்னார்.

சீனாவுக்கு எதிராக ஆதரவைத் திரட்டிவரும் திரு. பொம்பேயோ, தமது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாகத் தற்போது ஜக்கர்த்தா சென்றுள்ளார்.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியை (Retno Marsudi) அவர் சந்தித்தார்.

இருதரப்புப் பங்காளித்துவ முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டைத் தலைவர்கள் மறுஉறுதி செய்துகொண்டனர்.

சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை அதிகரித்தல், பொருளியல் உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பான முக்கிய அம்சங்களில் இருவரும் இணக்கம் கண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்