Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனிதர்கள் ரசிக்கும் வித்தியாசமான, சிறிய கலைப்படைப்பு

சிறிய சன்னல்களுடன் கூடிய கதவு. சன்னல்களில் காட்சிக்கு வைக்கப்பட்ட சின்னஞ்சிறு விற்பனைப் பொருள்கள். கடைக்கு வெளியே நகத்தின் அளவிலான குப்பைத்தொட்டி, சாலை அறிவிப்பு.

வாசிப்புநேரம் -
மனிதர்கள் ரசிக்கும் வித்தியாசமான, சிறிய கலைப்படைப்பு

படம்: AFP/Torrence OTTEN

சிறிய சன்னல்களுடன் கூடிய கதவு. சன்னல்களில் காட்சிக்கு வைக்கப்பட்ட சின்னஞ்சிறு விற்பனைப் பொருள்கள். கடைக்கு வெளியே நகத்தின் அளவிலான குப்பைத்தொட்டி, சாலை அறிவிப்பு.

இவையெல்லாம் எங்கே? எதற்காக?

சுவீடனின் மால்மோ (Malmo) நகரத்தின் புதிய கலைப் படைப்பு இதுவே.

எலிகள் நம்மைப் போலவே நம் உலகத்தில் வாழ்ந்தால் எவ்வாறு இருக்கும்?

அந்தக் கேள்விக்கான பதிலாகப் பல சிறிய வடிவிலான படைப்புகளை உருவாக்கி வருகிறது Anonymouse எனும் கலைஞர்க் குழு.

பெயரைத் தவிர்த்து குழுவைப் பற்றி யாருக்கும் எந்தத் தகவலும் தெரியாது.

மால்மோ நகர நடைபாதையில் உள்ள காற்றுப்போக்கியில் சிறிய கடைத்தொகுதியின் வெளிப்புறம் ரகசியமாகக் கட்டப்பட்டுள்ளது.

எலிகளுக்கான உணவகம் ஒன்றைக் கட்டி, Anonymouse அதன் முதல் படைப்பை 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அரங்கேற்றியது.

அதை அடுத்து, எலிகளுக்கான கேளிக்கைப் பூங்கா, நடனக்கூடம் ஆகியவற்றையும் அந்தக் குழு வெவ்வேறு இடங்களில் கட்டியுள்ளது.

படைப்பைக் காண்பதற்குக் கட்டடத்திற்கு வெளியே பொதுமக்கள் திரள்கின்றனர். படைப்பைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்