Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆங்கிலப் பேச்சைக் கேலிசெய்ததற்கு மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அழகி

பிரபஞ்ச அழகிப் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள வேளையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அழகி.

வாசிப்புநேரம் -
ஆங்கிலப் பேச்சைக் கேலிசெய்ததற்கு மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அழகி

(படம்: Facebook/Miss USA)

பிரபஞ்ச அழகிப் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள வேளையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அழகி.

வியட்நாம், கம்போடிய அழகிகளைக் கேலி செய்ததற்காக அமெரிக்க அழகி சாரா ரோஸ் சம்மர்ஸ் (Sarah Rose Summers) குறைகூறப்பட்டார்.

இரு நாடுகளின் அழகிகளாலும் சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்று குமாரி சம்மர்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியா, கொலம்பியா ஆகியவற்றின் அழகிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்தக் கருத்தை அமெரிக்க அழகி முன்வைத்தார்.

உரையாடலின் காணொளி குமாரி சம்மர்ஸின் Instagram தளத்தில் பதிவு செய்யப்பட்டது.

சரளமாக ஆங்கிலம் பேச இயலாததால் வியட்நாம், கம்போடிய அழகிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அழகி கூறியதாகக் குமாரி சாண்டர்ஸ் சொல்வதும் காணொளியில் பதிவானது.

காணொளியைக் கண்டு இணையவாசிகள் கொந்தளித்தனர். அதையடுத்து, குமாரி சம்மர்ஸ் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

"ஒரு சில அழகிகளின் தன்னம்பிக்கையை புகழ்ந்து கூறும் வேளையில் நான் கூறிய சில கருத்துகள், தவறாகவும் அவமரியாதையாகவும் எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்பதை இப்போது உணர்கிறேன்."

என்று குமாரி சம்மர்ஸ் Instagram-இல் பதிவு செய்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்