Images
  • injection
    கோப்புப்படம்: Reuters/Eric Gaillard

Moderna தடுப்பூசி பெறுவோருக்கு ஓராண்டுவரை எதிர்ப்புச் சக்தி நிலைக்கும்

Moderna மருந்தாக்க நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசியைப் பெறுவோரின் உடலில் ஓராண்டு வரை எதிர்ப்புச் சக்தி இருக்குமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பம் புதியவகைக் கொரோனா கிருமியைத் தடுக்கவும் உதவும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.

mRNA-1273 என்ற அதன் தடுப்புமருந்துக்குக் கொரோனா நோய்க்கிருமியின் வடிவத்தைப் போலவே அணுக்களை உருவாக்கக் கூடிய தன்மை உள்ளது.

உடலில் உள்ள இயற்கையான தடுப்புச் சக்திக்குக் கொரோனா நோயை எதிர்த்துத் தடுக்க அது கற்றுத் தரும்.

இவ்வாண்டு 600 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரை தடுப்பூசிகள் விநியோகம் செய்ய முடியும் என்று Moderna நிறுவனம் கூறியுள்ளது.

அதன் மூலம், அந்நிறுவனம் சுமார் 11.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Top