Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் பார்வை ஆசியாவின் பக்கம் - அமெரிக்கத் துணையதிபரைச் சந்தித்த இந்தியப் பிரதமர்

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) சந்தித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் பார்வை ஆசியாவின் பக்கம் - அமெரிக்கத் துணையதிபரைச் சந்தித்த இந்தியப் பிரதமர்

(படம்: REUTERS/Elizabeth Frantz)

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவின் பார்வை, ஆசியாவின் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிஃபிக் வாட்டரத்துக்கான முக்கியத்துவத்தைத் திருவாட்டி ஹாரிஸ் சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

ஆசிய வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதன் மிக முக்கிய நட்புநாடான இந்தியாவுடனும் உறவை வலுப்படுத்திக்கொள்ள பைடன் நிர்வாகம் முனைகிறது.

இந்தியப் பிரதமரும் இந்தியப் பின்னணியைக் கொண்ட திருவாட்டி ஹாரிஸும் நடத்திய சந்திப்பு, அமெரிக்காவில் உள்ள சுமார் 4 மில்லியன் இந்திய வம்சாவளியினருக்குப் பெருமைக்குரிய தருணமாக இருந்தது.

திருவாட்டி ஹாரிஸை உண்மையான நண்பர் என வருணித்த திரு மோடி, COVID-19 நெருக்கடியை இந்தியா சமாளிப்பதற்கு அவர் பெரும் ஆதரவு தந்ததைச் சுட்டினார். 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்