Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சாலையில் கிடந்த பண நோட்டுகள்...குழப்பத்தில் ஆழ்ந்த மக்கள்

வறுமையில் வாடுவோருக்கு நிதியுதவி வழங்க ஒரு தம்பதி வித்தியாசமான வழியைக் கையாண்டனர்.

வாசிப்புநேரம் -

லண்டன்: வறுமையில் வாடுவோருக்கு நிதியுதவி வழங்க ஒரு தம்பதி வித்தியாசமான வழியைக் கையாண்டனர்.

அது அந்த நகரிலுள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்துக்கு வடகிழக்கிலுள்ள ப்ளாக்ஹால் ஹோலியரி (Blackhall Colliery) நகரில், பண நோட்டுகள் சாலையில் கிடப்பதைப் பார்ப்பது அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு வழக்கமான காட்சி.

சாலையில் கிடக்கும் பணத்தை எடுத்தால் மீண்டும் ஆங்காங்கே புதிய நோட்டுகள் போடப்படும். அவற்றின் மொத்த மதிப்பு, 2,600 டாலர்.

இருப்பினும், குடியிருப்பாளர்களில் பலர், பணத்தை வைத்துக்கொள்ளாமல், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவற்றில் இருந்த விரல் ரேகைகளைக் கொண்டு, நோட்டுகளை விட்டுச் சென்ற தம்பதியைக் காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

தம்பதியிடம் பணத்தைத் திருப்பிக்கொடுக்க திட்டமிடுகின்றனர் காவல்துறையினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்