Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூச்சி மருந்தால் புற்றுநோய் - 290 மில்லியன் டாலர் வழக்கு

அமெரிக்காவில் காட்டுச்செடிகளை அழிக்கும் மருந்து, புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்பது பற்றி தமதுக்குத் தெரிவிக்காததற்கு, Monsanto நிறுவனத்தைச் சுமார் 290 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பூச்சி மருந்தால் புற்றுநோய் - 290 மில்லியன் டாலர் வழக்கு

(படம்: REUTERS/Mike Blake/File Photo)

அமெரிக்காவில் காட்டுச்செடிகளை அழிக்கும் மருந்து, புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்பது பற்றி தமதுக்குத் தெரிவிக்காததற்கு, Monsanto நிறுவனத்தைச் சுமார் 290 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வேளாண் ரசாயன நிறுவனத்தின் காட்டுச்செடிகளை அழிக்கும் மருந்தைத் தமது வேலைக்காக, டிவேய்ன் ஜான்சன் (Dewayne Johnson) என்பவர் பயன்படுத்தி வந்தார்.

அந்த மருந்து பொருட்களில் இருக்கும் Glaifersate ரசாயனம், தமதுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்குக் காரணம் என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், அந்த மருந்து, பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானது என்றும், புற்றுநோக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் Monsanto நிறுவனம் கூறிவருகிறது.

அத்தகைய வழக்கு அந்த நிறுவனத்தின் மீது கொண்டுவரப்பட்டிருப்பது இதுவரை முதல்முறை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்