Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் கிருமி அடையாளம்

உலகின் பல நாடுகளில் COVID-19 இன் புதிய ஒமிக்ரான் (Omicron) கிருமி அடையாளம் காணப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் கிருமி அடையாளம்

(கோப்புப் படம்: AFP)

உலகின் பல நாடுகளில் COVID-19 இன் புதிய ஒமிக்ரான் (Omicron) கிருமி அடையாளம் காணப்படுகிறது.

பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருவருக்கு அந்த ரகக் கிருமி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அந்தக் கிருமி பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிய ஒமிக்ரான் கிருமி பற்றிய அச்சம் அதிகரித்திருப்பதால் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் அதன் பக்கத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்குப் பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தற்போதுள்ள சூழலில் அதற்கு அவசியமில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளபோதும் அச்சம் நீங்கவில்லை.

தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தாய்லந்தும், இலங்கையும் அண்மையில் இணைந்துள்ளன.

முன்னதாக ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அத்தகைய பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்