Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுத்தம் செய்யும் திரவத்தைக் குடித்துக் கொப்பளித்து... ஆபத்தான செயல்களில் ஈடுபடும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் துப்புரவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் திரவங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஓர் ஆய்வில் வழி தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சுத்தம் செய்யும் திரவத்தைக் குடித்துக் கொப்பளித்து... ஆபத்தான செயல்களில் ஈடுபடும் அமெரிக்கர்கள்

படம்: REUTERS/Jessica Rinaldi

அமெரிக்காவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் துப்புரவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் திரவங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஓர் ஆய்வில் வழி தெரியவந்துள்ளது.

கிருமித்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் அவ்வாறு செய்வதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

Bleach போன்ற சுத்தம் செய்யும் திரவங்களை சருமத்தின் மீது பயன்படுத்துவது, அவற்றைக் குடித்துக் கொப்பளிப்பது, திரவத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களைக் கழுவுவது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களில்...

கடந்த ஒரு மாதத்தில் சுகாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் - 25%

அவ்வாறு செய்யக்கூடாது என்று அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டதை அறிந்தவர்கள் - 39%

COVID-19 சூழலில், நச்சு சம்பவங்களைக் குறித்து, நச்சுக் கட்டுப்பாடு நிலையங்களுக்கு வரும் அழைப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சுத்தம் செய்யும் திரவங்களை உட்கொள்வது, கிருமித்தொற்றை எதிர்கொள்ள உதவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதையடுத்து, சுத்தம் செய்யும் திரவங்களின் உற்பத்தியாளர்கள் அவற்றின் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்