Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இயேசு நாதர் பிறந்த நகரில் புதுப்பிக்கப்பட்ட பழங்கால தேவாலயம்

நூற்றாண்டு பழமை வாய்ந்த பெத்லஹம் தேவாலயம் கிறிஸ்துமஸுக்காகப் புதுப் பொலிவு பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
இயேசு நாதர் பிறந்த நகரில் புதுப்பிக்கப்பட்ட பழங்கால தேவாலயம்

(படம்: AFP / THOMAS COEX)


நூற்றாண்டு பழமை வாய்ந்த பெத்லஹம் தேவாலயம் கிறிஸ்துமஸுக்காகப் புதுப் பொலிவு பெற்றுள்ளது.

நெடுங்காலமாகக் கரி படிந்திருந்த Mosaic சுவர்களைக் கடந்த 15 மாதங்களாக நிபுணர் குழு புதுப்பித்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் சுவர்களில் பதிக்கப்பட்டன அந்தக் கற்கள்

கண்ணாடியும் தங்கமுமாக மின்னும் அந்தச் சுவர்களின் அளவு முதலில் 2,000 சதுர மீட்டர்கள். இயற்கைப் பேரிடர்கள், போர்கள் ஆகியவற்றின் பாதிப்பால், தற்போது 125 சதுர மீட்டர் சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது.

பளிச்சென மின்னும், தங்கமுலாம் பூசப்பட்ட தேவதைச் சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்களைக் கவர்கின்றன.

அங்குள்ள தேவைதைச் சிற்பங்களில் ஒன்று புதுப்பிப்புப் பணிகளிண் போது கண்டுபிடுப்பட்டது.

இரு கண்ணாடிகளின் நடுவே தங்க இலைகள் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன தேவாலயத்தின் Mosaic கற்கள்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்