Images
  • Insat

Instagram-இல் அதிக ரசிகர்களைக் கொண்ட உலகத் தலைவர் யார்?

அன்றாட நடவடிக்கைகளை நிழல்படங்களாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் உலகத் தலைவர்களுக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

மற்ற தலைவர்களுடன் நடக்கும் சந்திப்புகளின்போதும், அலுவலகத்திற்கு அப்பாற்பட்ட சில நடவடிக்கைகளையும் ரசிகர்களுக்கு எடுத்துக் கூற Instagram ஒரு சிறந்த தளம்.

Instagram-இல் ஆக ரசிகர்களைக் கொண்ட உலகத் தலைவர் என்ற பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது.

அவருக்கு 14.8 மில்லியன் ரசிகர்கள். அவருக்கு அடுத்த நிலையில் இந்தோனேசிய பிரதமர் ஜோக்கோ விடோடோ. மூன்றாடம் நிலையில் டோனல்ட் டிரம்ப் உள்ளார்.

உலகத் தலைவர்கள் பதிவேற்றிய படங்களில் மக்கள் அதிகம் விரும்பிய இரண்டு படங்களையும் பிரதமர் மோடி பதிவேற்றம் செய்திருந்தார்.

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரின் திருமண விருந்தில் பங்கேற்ற அவர், அங்கு எடுத்த படம், ஆக ரசிக்கப்பட்ட படமாகத் திகழ்கிறது.  

Top