Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் ஆக்லந்துக்கு முதலிடம்

COVID-19 நோய்த்தொற்றுக் காலத்தில், நியூஸிலந்தின் ஆக்லந்து (Auckland) நகரம் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் (most liveable cities) தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றுக் காலத்தில், நியூஸிலந்தின் ஆக்லந்து (Auckland) நகரம் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் (most liveable cities) தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Economist Intelligence Unit (EIU) நிறுவனத்தின் வருடாந்திரத் தரவரிசையில், 2018ஆம் ஆண்டிலிருந்து முன்னிலை வகித்த வியன்னா நகரை, ஆக்லந்து பின்னுக்குத் தள்ளியது.

வியன்னா, பட்டியலின் முதல் 10 இடங்களில் வரவில்லை.

நியூஸிலந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

நியூஸிலந்தின் முடக்கநிலை நடவடிக்கைகள் அதன் எல்லைகளுக்குள்
COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன.

அதன் நகரங்களுக்கு அது பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

ஆக்லந்து போன்ற நகரங்களில் உள்ள குடிமக்களால் நோய்த்தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடிந்தது என்று EIU தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் தரவரிசை வெளியிடப்படவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை 2019ஆம் ஆண்டுக்கானது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்