Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்மொழியைப் போற்றும் 'அனைத்துலகத் தாய்மொழி தினம்

இன்று அனைத்துலகத் தாய்மொழி தினம். ஆண்டுதோறும் இன்றைய தினம் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

இன்று அனைத்துலகத் தாய்மொழி தினம். ஆண்டுதோறும் இன்றைய தினம் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தாய்மொழி தினம் 2000-ஆம் ஆண்டு முதல்முறை அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம் முதன்முதலில் 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அது குறித்து அறிவித்தது.

ஐக்கிய நாட்டுப் பொதுச்சபையில் 2008ஆம் ஆண்டு அதன் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலாசார பன்முகத்தன்மையையும் பன்மொழித் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் உலக அளவில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 6,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் சுமார் 40 விழுக்காட்டு மொழிகள் வழக்கொழிந்து போவதற்கானஆபத்து உள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் தமிழ்மொழியைச் சுமார் 74 மில்லியன் பேர் பேசுகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, மொரீஷியஸ் இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

சிங்கப்பூரின் 4 அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று. இருமொழித் திறனுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழின் சிறப்பை எடுத்துக்கூற ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 'தமிழ்மொழி' மாதமாகக் கொண்டாடப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்