Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மரத்தின் மீது ஏறிய மலைச் சிங்கத்தை மீட்ட தீயணைப்பாளர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் ஏறிய மலைச் சிங்கத்தைத் தீயணைப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மரத்தின் மீது ஏறிய மலைச் சிங்கத்தை மீட்ட தீயணைப்பாளர்கள்

(படம்: Twitter.com/CPW_NE)

வாசிப்பு நேரம்: 40 விநாடிகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் ஏறிய மலைச் சிங்கத்தைத் தீயணைப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

சுமார் 15 மீட்டர் உயரத்தில் இருந்த மரக்கிளையில் மலைச் சிங்கம் ஏறி உட்கார்ந்திருந்தது.

அந்த வட்டாரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு, மயக்க மருந்து அளிக்கப்பட்ட மலைச்சிங்கம் கீழே இறக்கப்பட்டது.

பரிசோதனை செய்த பிறகு மலைச்சிங்கத்தை ஆய்வாளர்கள் வனப்பகுதில் கொண்டு போய்விட்டனர்.

காட்டிலிருந்து வெளியேறி மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு மலைச்சிங்கம் வருவது வழக்கமானது என்றாலும், அதை மரத்திலேயே விட்டு வைப்பது சமூகத்திற்குப் பாதுகாப்பல்ல என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்