Images
  • Mubarak Sons
    (படம்: REUTERS/Amr Abdallah Dalsh) 

எகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மகன்களைக் கைதுசெய்ய உத்தரவு


எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் (Hosni Mubarak) மகன்கள் ஆலா, கமால் (Alaa, Gamal) இருவரையும் கைதுசெய்யும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குச் சந்தை, மத்திய வங்கி ஆகியவற்றின் விதிகளை மீறியதாக, 2012ஆம் ஆண்டு தொடங்கிய வழக்கின் தொடர்பில், அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டை மறுத்துவரும் இருவரும், கடந்த மூவாண்டாகப் பிணையில் வெளிவந்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு, அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னர், அவரது மகன் கமால் முபாரக் தந்தையைத் தொடர்ந்து அதிபராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Top