Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூர் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெறும் ஸிம்பாப்வே முன்னாள் அதிபர் முகாபே

ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே, கடந்த நான்கு மாதங்களாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெறும் ஸிம்பாப்வே முன்னாள் அதிபர் முகாபே

(படம்: Reuters/Siphiwe Sibeko)

ஸிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே, கடந்த நான்கு மாதங்களாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

95 வயது திரு. முகாபே, எந்த நோய்க்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அவருடைய உடல்நலம் மேம்பட்டு வருவதாக ஸிம்பாப்வேயின் தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா தெரிவித்துள்ளார்.

அதனால் திரு. முகாபே கூடிய விரைவில் வீடு திரும்புவார் என்று திரு. நங்கக்வா கூறினார்.

திரு. முகாபே, மே மாதத்தில் சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவார் என்று ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருடைய சிகிச்சை இரு வாரங்களில் முடிவடையும் என்று முன்பு கருதப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தள்ளாமையாலும் உடல்நலக் குறைவாலும் திரு. முகாபேயால் நடக்க இயலவில்லை என, திரு. நங்கக்வா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

இப்போது திரு. முகாபேயின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிய, குழு ஒன்றைச் சிங்கப்பூருக்கு அனுப்பியிருப்பதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்