Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங் காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்த 'Mulan' நடிகைக்கு எதிர்ப்பு

Disney திரைப்படமான 'Mulan'இன் நடிகை, ஹாங்காங் விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திரைப்படத்தைப் புறக்கணிக்கும்படி குரல்கள் எழுந்துள்ளன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்த 'Mulan' நடிகைக்கு எதிர்ப்பு

(படம்: Mulan/ Facebook)

Disney திரைப்படமான 'Mulan'இன் நடிகை, ஹாங்காங் விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்திரைப்படத்தைப் புறக்கணிக்கும்படி குரல்கள் எழுந்துள்ளன.

சீனத் திரைப்பட நடிகை லியு யீஃபெய் (Liu Yifei) சீன சமூக ஊடகத் தளமான Weiboவில் அக்கருத்தைப் பகிர்ந்தார்.

கடந்த 10 வாரங்களாக ஹாங்காங்கில் நிலவி வரும் சர்ச்சையில் காவல்துறை பலவந்தமான போக்கைக் கையாண்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்களும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இவ்வேளையில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருக்கும் லியு, People's Daily எனும் சீன நாளிதழின் பதிவைத் தம் Weibo கணக்கில் பகிர்ந்து ஹாங்காங் காவல்துறைக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து லியு நடிக்கும் 'Mulan' திரைப்படத்தைப் புறக்கணிக்கச் சொல்லும் #BoycottMulan என்ற குறிப்பு Twitterஇல் பரவி வருகிறது.

காவல்துறை கொடூரமான முறையில் நடந்துகொள்வதை லியு ஆதரிப்பதாக Twitter பயனீட்டாளர்கள் அவரைக் குறைகூறி வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்