Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பல நாள் திருடனுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை

அமெரிக்காவில் பல அருங்காட்சியகத் திருட்டுகளைப் புரிந்தவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பல நாள் திருடனுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை

படம்: AFP

அமெரிக்காவில் பல அருங்காட்சியகத் திருட்டுகளைப் புரிந்தவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1960களிலும் 1970களிலும், அருங்காட்சியகங்களில் பல பொருள்களைத் திருடியதை 78 வயது கேவின் (Gavin) ஒப்புக்கொண்டார்.

2018ஆம் ஆண்டு தான் திருடிய ஓர் அரியவகைத் துப்பாக்கியை (rifle) விற்க முயன்றபோது அவர் பிடிபட்டதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

அப்போதுதான் கேவின் தான் புரிந்த மற்ற திருட்டுகளையும் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அவற்றைத் திருடியதற்கான காரணம்? பழைய பொருள்களைச் சேகரிப்பது பிடிக்குமாம்...

அவர் புரிந்த திருட்டுகளில் பலவற்றுக்குத் தண்டனை அளிக்கும் காலவரையறை முடிந்துவிட்டததாக BBC சொன்னது.

ஒரு நாள் சிறைத் தண்டனையைத் தவிர ஓராண்டு வீட்டில் இருப்பது உட்பட 3 ஆண்டுகள் கண்காணிப்புடன் கூடிய விடுதலையும் 25,000 டாலர் அபராதமும் கேவினுக்கு விதிக்கப்பட்டது.

அவர் திருடிய பொருள்களுக்குச் சுமார் 23,000 டாலரையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்