Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ExxonMobil நிறுவனத்தைவிட அதிக மதிப்புடைய இலோன் மஸ்க் (Elon Musk)

ExxonMobil நிறுவனத்தைவிட அதிக மதிப்புடைய இலோன் மஸ்க் (Elon Musk)

வாசிப்புநேரம் -

ExxonMobil நிறுவனத்தைவிட அதிகச் சொத்து மதிப்புடையவராக இலோன் மஸ்க் (Elon Musk) உருவெடுத்துள்ளார்.

இலோன் மஸ்க், 300 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள பெருஞ்செல்வந்தர் என்னும் நிலையை மிக விரைவில் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடைய Tesla நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டினால் அவரது மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

தற்போது, அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு, 289 பில்லியன் டாலர்.

ExxonMobil நிறுவனத்தின் மொத்த மதிப்பு, அதைவிடக் குறைவாக, 272 பில்லியன் டாலராக உள்ளது.

அவர் பெட்ரோல், டீசல் போன்ற மரபான எரிபொருள் பயன்பாட்டை முற்றாக நிறுத்த முனைகிறார்.

ExxonMobil, பெட்ரோலியப் பொருள்களோடு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிறுவனம்.

மஸ்க், உலக மக்களை, பெட்ரோல், டீசல் போன்றவற்றில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்.

எனவே, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ExxonMobilலின் பருவநிலை தொடர்பான திட்டங்கள், கடுமையாகக் குறைகூறப்பட்டு வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்