Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காடுகள் தொடர்பான கண்காட்சிக்கூடமாக மாறிய காற்பந்து விளையாட்டரங்கம்

Klaus Littmann ஆஸ்ட்ரியாவில் வசிக்கும் கலைஞர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Klaus Littmann ஆஸ்ட்ரியாவில் வசிக்கும் கலைஞர்.

Klagenfurt நகரில் உள்ள பழைய காற்பந்து விளையாட்டரங்கில் அவர் ஒரு வித்தியாசமான கண்காட்சியை அமைக்கத் திட்டமிட்டார்.

தொழில்மயமாக்கல் இயற்கையின்மீது ஏற்படுத்திய தாக்கங்கள், 1970களில் Max Peintner என்பவர் வரைந்த ஓவியம் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை உருவாக்க முனைந்தார்.

விளையாட்டரங்கிலிருந்து முளைத்து எழும் வனப்பகுதியைக் காட்ட முடிவெடுத்தார்.

அதற்காக, 300 மரங்களை Wörthersee விளையாட்டரங்கின் மத்தியில் நட்டு அழகுபார்த்தார்.

'வனத்துக்காக' எனப் பெயரிடப்பட்ட அந்தப் பசுமைக் கண்காட்சி,
நேற்று முன்தினம்(செப். 08) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அதனைக் கண்டுகளிக்கலாம்.

அனுமதி இலவசம்.

முதல் நாள் அன்று, கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் 5,000 பேர் பசுமைக் கண்காட்சியைக் காண வந்திருந்ததாய்த் தகவல்கள் கூறுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்