Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மாரில் அதிக அளவில் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்-கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள அமெரிக்கா

மியன்மாரில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கடும் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

மியன்மாரில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கடும் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

நேற்றுமட்டும் அங்கே 100க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து இவ்வளவு அதிகமானோர் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதன்முறை.

மிகச் சிலருக்குச் சேவையாற்றுவதற்காக, ராணுவ அரசாங்கம் பொதுமக்களின் உயிரை பலிவாங்கத் தயாராய் இருப்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாக,
திரு. பிளிங்கன் குறிப்பிட்டார்.

மியன்மாரின் துணிவுமிக்க மக்கள், ராணுவ ஆட்சியின் பயங்கரவாதத்தை நிராகரிப்பதாக அவர் சொன்னார்.

முன்னதாக, ஆயுதமற்ற பொதுமக்களைப் பாதுகாப்புப் படை படுகொலை செய்வதாகக் கூறி, மியன்மாரிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ராணுவம் நேற்று அனுசரித்த ஆயுதப்படை தினம், பயங்கரமான தினம் என்றும் வெட்கக்கேடான தினம் என்றும் வரலாற்றில் பதிவாகும் என்று அது குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்