Images
  • Katherine Tai
    (கோப்புப் படம்: Pete Marovich/Pool via REUTERS)

மியன்மாரில் பேச்சு நடத்த, சிறப்புத் தூதரை உடனே அனுப்ப வேண்டும்: ஆசியானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

மியன்மாரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஆசியான், சிறப்புத் தூதரை உடனே அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஆசியான் பொருளியல் அமைச்சர்களைக் காணொளி மூலம் சந்தித்தபோது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டை (Katherine Tai) அவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

மியன்மார் நாடாளுமன்ற உறுப்பினர்களாய் இருந்தவர்களின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம், ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் அங்குள்ள நிலவரம் குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

மியன்மாருக்கான ஆசியான் சிறப்புத் தூதராக, புருணை இரண்டாம் வெளியுறவு அமைச்சர் எரிவான் யூசோஃப் (Erywan Yusof) நியமிக்கப்பட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆனால் அவருடைய முயற்சியில் பெரிய பலன் விளைந்ததாகத் தெரியவில்லை.

ஜனநாயகத்துக்கு ஆதரவளிக்கவும், ராணுவத்திடமிருந்து மக்களைக் காப்பாற்றவும், அனைத்துலகச் சமுதாயத்தை மியன்மார் சார்ந்திருக்க முடியாது என்று தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் குறிப்பிட்டது.  

-Reuters

Top