Images
  • Kyaw Zwar Minn
    (படம்: AFP/Niklas HALLE'N)

லண்டனில் உள்ள மியன்மார் தூதரகம், ராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரி வசம் - பிரிட்டன் கண்டனம்

பிரிட்டனுக்கான மியன்மார் தூதர் சோ ஸுவார் மின் (Cho Zwar Minn), யங்கூன் ராணுவத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் லண்டனில் உள்ள தூதரகத்தைக் கைப்பற்றியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் ராணுவ அரசாங்கத்துடனான தொடர்பைக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன் துண்டித்துக் கொண்டதை அடுத்து அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியை ராணுவ ஆட்சி விடுவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திரு. சோவுக்குத் தூதரகத்திற்குள் நுழைய அனுமதி நிராகரிக்கப்பட்டது.

அதனை அடுத்து, தூதருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டனின் Mayfair வட்டாரத்தில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்துக்கு முன் கூடினர்.

அந்தக் கட்டடம் தமக்குச் சொந்தமானது என்றும் இரவு முழுவதும் அங்கேயே காத்திருக்கப்போவதாகவும் அவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தாம் தூதரகத்திலிருந்து வெளியேறியவுடன் ராணுவத்தினர் கட்டடத்தைக் கைப்பற்றியதாகக் கூறிய திரு. சோ, பிரிட்டிஷ் அரசாங்கம் இதில் தலையிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பிரிட்டன், லண்டனில் உள்ள மியன்மார் தூதரகம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரு. சோவிற்கு ஆதரவாக Twitterஇல் பதிவு செய்திருந்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர், மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அங்கு ஜனநாயகம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

- AFP/vc 

Top