Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Myanmar Gems Enterprise நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடை

மியன்மார் அரசாங்கத்தின் Myanmar Gems Enterprise நிறுவனத்துக்கு, அமெரிக்க  நிதித்துறை தடை விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மார் அரசாங்கத்தின் Myanmar Gems Enterprise நிறுவனத்துக்கு, அமெரிக்க நிதித்துறை தடை விதித்துள்ளது.

ஆபரணக்கற்கள் விற்பனை செய்யும் அந்நிறுவனத்தின் அனைத்துச் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன;
நிறுவனத்துடனான எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கை, மியன்மார் ராணுவத்தின் வருவாயைப் பாதித்து, அதன் மீதான நெருக்கடியை அதிகரிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறியுள்ளார்.

மியன்மார் மக்கள் மீது வன்முறை தொடர்ந்தால் இன்னும் கூடுதலான தடைகள் விதிக்கப்படும் என அவர் Twitter இல் குறிப்பிட்டுள்ளார்.

Myanmar Gems Enterprise நிறுவனம், நாட்டின் சுரங்கங்களை நிர்வகித்து, அவற்றிலிருந்து கிடைக்கும் ஆபரணக் கற்களைச் சந்தைப்படுத்தி வருகிறது.

மியன்மாரில் பிப்ரவரி முதல் தேதி நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் வேறு 3 ஆபரணக்கற்கள் நிறுவனங்களுக்கு, அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்