Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய பரிமாணத்தில் நங்கையருக்கான நக அலங்காரம்

அலங்காரம் செய்யும் நிலையங்களில் ஆரோக்கியத்துக்குப் பங்கம் இல்லை என்பதால், நவயுக மங்கையரிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
புதிய பரிமாணத்தில் நங்கையருக்கான நக அலங்காரம்

(படம்: Pixabay)

நங்கையர் விரும்பும் நக அலங்காரம் புதிய பரிமாணம் பெற்றுள்ளது ஹாலிவுட்டில்.

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் நகங்களில் வண்ணம் பூச புதிய உத்திகள் பின்பற்றப்படுகின்றன.

நகப்பூச்சு உலகம் முழுக்க பிரபலம்.

(படம்: Pixabay)

பழைய வண்ணத்தை மாற்றிப் புதிதாகப் பூசுவதில் சிரமங்கள் உண்டு.

சில நேரங்களில் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

2017 ஆம் ஆண்டு, அமெரிக்க மக்கள் நக அலங்காரத்துக்குச் செலவிட்ட தொகை சுமார் 5.8 பில்லியன் டாலர்.

(படம்: Pixabay)

வண்ண வண்ண நகப் பூச்சுகளின் விற்பனை சுமார் 800 மில்லியன் டாலர்.

நகப் பூச்சுதான் என்றாலும், நளினம் தேவை என்று நங்கையர் பலரும் விரும்புகின்றனர்.

(படம்: லட்சுமி கோபி)

முன்னைப் போல் அல்லாமல் இப்போது பலரும் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான நகப்பூச்சு முறையை நாடுகிறார்கள்.

அதற்கேற்ப நக அலங்கார நிலையங்களும் புதிய உத்திகளை அறிமுகம் செய்துள்ளன.

ஒரு மாதம் வரை நகங்களில் வண்ணப் பூச்சு நீடிக்க புறஊதாக் கதிர்களைக் குறைவாக வெளிப்படுத்தும் ஒளியுமிழ் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

நகச் சாயத்தை நீக்க அதிக நச்சுத்தன்மையற்ற மூலப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட அழிரப்பர் பயன்படுத்தப்படுகிறது.

அலங்காரம் செய்யும் நிலையங்களில் ஆரோக்கியத்துக்குப் பங்கம் இல்லை என்பதால், நவயுக மங்கையரிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்