Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

406 ஆயிரம் டாலருக்குத் தொப்பியா?

வரலாற்றுப் புகழ்பெற்ற பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டுக்குச் (Napoleon Bonaparte) சொந்தமானதாக நம்பப்படும் தொப்பி, 406 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
406 ஆயிரம் டாலருக்குத் தொப்பியா?

(படம்: Pixabay)

வரலாற்றுப் புகழ்பெற்ற பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டுக்குச் (Napoleon Bonaparte) சொந்தமானதாக நம்பப்படும் தொப்பி, 406 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதைவிட அது 10 மடங்கு எனக் கூறப்பட்டது.

தொப்பியை வாங்கியவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

18ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸை ஆண்ட நெப்போலியன் அதன் முதல் பேரரசர் என்ற சிறப்புக்குரியவர்.

போன நூற்றாண்டு வரை அவரது அந்த இராணுவ பாணித் தொப்பி, குடும்ப உறுப்பினர்கள் வசம் இருந்தது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஃப்ரான்ஸைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு அது விற்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்