Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

NASAவின் சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகப் பறந்தது

NASAவின் Ingenuity என்கிற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகப் பறந்துள்ளது.

வாசிப்புநேரம் -
NASAவின் சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகப் பறந்தது

(படம்: AFP/Handout)

NASAவின் Ingenuity என்கிற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகப் பறந்துள்ளது.

அதுவே இன்னொரு கிரகத்தில் இயக்கப்பட்ட முதல் விமானப் பயணம்.

சுமார் 1.8 கிலோகிராம் எடையுள்ள அந்த ஹெலிகாப்டர், ஏறத்தாழ 3 மீட்டர் உயரத்திற்குப் பறந்தது.

அது சுழன்று, 39.1 வினாடிகளுக்குப் பின் தரையிறங்கியது.

அதன் மூலம் எடுக்கப்பட்ட தகவல்களும் படங்களும் 278 கிலோமீட்டர் கடந்து, சுமார் மூன்றரை மணி நேரத்திற்குப் பின் பூமியில் உள்ள NASAவிற்குத் திரும்பின.

அந்த ஹெலிகாப்டர் பயணத்திற்காகக், கடந்த 6 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டது.

அதன் வெற்றி, முதல் விமானத்தை உருவாக்கிப் பறக்கச் செய்த Wright brothersஇன் தருணத்திற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

1903ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நார்த் கரோலைனா (North Carolina) மாநிலத்தில் Wright brothers, பூமியில் முதல் விமானத்தை இயக்கினர்.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்