Images
  • Sun

சூரியனை நோக்கி வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தைத் தொடங்கவுள்ளது NASA

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA சூரியனை நோக்கி வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தைத் தொடங்கவுள்ளது.

Parker Solar Probe எனும் விண்கலம் வேறு எந்த விண்கலமும் சென்றிராத சூரியனின் வெளிப் புற மண்லடத்திற்குச் சுமார் 6 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் செல்லவிருக்கிறது.

கடும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வெப்பக் கேடயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய ஒளிப்புயலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அது உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
  

Top