Images
  • Nasa
    படம்: AFP

Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய்க்கோளில் வெற்றிகரமாக முதல் நாள் இரவைக் கடந்துள்ளது: NASA

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (NASA) Ingenuity எனும் சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க்கோளில் வெற்றிகரமாக முதல் நாள் இரவைக் கடந்துள்ளது.

அது ஒரு பெரிய மைல்கல் என்று NASA தெரிவித்தது.

மிகவும் குறைந்த எடையைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர், Perseverance வாகனத்திலிருந்து சனிக்கிழமை இறக்கிவிடப்பட்டது.

சூரியசக்தித் தகடுகள் மூலம் Ingenuity ஹெலிகாப்டர் அதன் மின்சாரப் பகுதிகளைக் குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறது.

அனைத்தும் சரியாக நடந்தால், Ingenuity-யின் முதல் பறக்கும் முயற்சி இம்மாதம் 11ஆம் தேதி மாலையில் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-AFP 

Top