Images
  • NASA Rover
    (படம்: AFP)

செவ்வாய் விண்கலத்திற்கு விடைகொடுக்கிறது NASA

செவ்வாய்க்கோளைப் பற்றிய தகவல்களைக் கடந்த 15 ஆண்டுகளாக பூமிக்கு அனுப்பிவைத்த 'Opportunity' எனும் விண்கலம் கைவிடப்பட்டுள்ளது.

விண்கலத்துக்கும் பூமியிலிருக்கும் நிலையத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிய நிலையில் NASA இவ்வாறு தெரிவித்துள்ளது.

2004 ஜனவரியில் செவ்வாய்க்கோளை அடைந்தது 'Opportunity'.

உயிரனங்கள் வாழும் அளவிற்குச் செவ்வாய்க்கோளில் வெப்பநிலையும் தண்ணீரும் இருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத் தகவல்களைச் சேகரித்தது 'Opportunity'.

ஆனால் கடந்த ஆண்டு செவ்வாய்க்கோளில் ஏற்பட்ட தூசுப் புயலில் அது பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

தூசி சூரியக்கதிர்களை மறைத்திருக்கும்.

இதனால் மின்கலன்களில் மின்னூட்ட முடியாமல் 'Opportunity' செயலிழந்திருக்கக்கூடும்.



 

Top