Images
  • dart spacecraft
    (படம்: Handout/NASA via AFP)

பூமியை நோக்கி வரும் சிறுகோளை நிறுத்தமுடியுமா? NASA-வின் சோதனை ஆரம்பம்

பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை நிறுத்தும் சோதனை முயற்சியில் NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் இறங்கியுள்ளது.

பூமியிலிருந்து 11 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுகோள் மீது வேண்டுமென்றே மோதவுள்ள விண்கலன் ஒன்று விண்வெளிக்குள் பாய்ச்சப்பட்டுள்ளது.

அது அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்திலிருந்து SpaceX உந்துகணை வழி பாய்ச்சப்பட்டது.

சோதனை முயற்சியில், சூரியனைச் சுற்றிவரும் Dimorphos எனும் 160 மீட்டர் அகலம்கொண்ட சிறுகோளின் பயணப்பாதையை மாற்றமுடியுமா என்பது ஆராயப்படும்.

சோதனையின் தாக்கம் அடுத்த ஆண்டு பிற்பாதியில் மட்டுமே தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமிக்கு அருகில் 140 மீட்டருக்கும் அதிகமான அகலம்கொண்ட சுமார் 10,000 சிறுகோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இருப்பினும், சிறுகோள்கள் பூமியில் விழக்கூடிய சாத்தியம், அடுத்த 100 ஆண்டுகளில் அவ்வளவாக இல்லை என்று கூறப்படுகிறது.

- AFP/dv

Top