Images
  • ice sheets
    படம்: Pixabay 

உலக வெப்பத்தால் உருகும் பனிப்பாளங்கள் -ஆய்வு செய்ய விண்ணுக்கு ஏவப்பட்ட ஆய்வுக் கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, பில்லியன் டாலர் மதிப்புள்ள செயற்கைக் கோள் ஒன்றை இன்று விண்வெளிக்கு அனுப்பி வைக்கவுள்ளது. 

உலக வெப்பமயம் காரணமாக, பூமியின் பனியுறைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்களைக் கண்டறியும் பொருட்டு, அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உந்துகணை ஒன்று அந்த செயற்கைக்கோளை, பூமியின் வட-தென் துருவங்களுக்கு நேர் மேலுள்ள சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தும்.

உரிய சுற்றுப்பாதையில் சுழலவிடப்பட்ட பின்னர், அது கடலிலும் நிலத்திலும் உள்ள பனிப் பாளங்களின் அடர்த்தியை அளவிடும்.

துணைக் கோளத்திலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, பனிப் பாளத்தின் மீது பட்டு எதிரொளிக்க ஆகும் நேரத்தைப் பொறுத்து பனிப் பாளங்களின் அடர்த்தி கணக்கிடப்படும்.


Top