Images
  • NASA (1)
    (படம்: NASA/Handout via REUTERS)

பூமியைப் போன்ற கோளைக் கண்டுபிடிக்கும் NASAவின் முயற்சியில் சிறிய தடை

NASAவின் புதிய செயற்கைக்கோள் பூமியைப் போன்ற வேறொரு கோள் உள்ளதா என்று கண்டறிய நேற்று (16 எப்ரல்) புளோரிடா மாநிலத்தை விட்டுப் புறப்படவிருந்தது.

ஆனால் தற்போது அதன் வழிகாட்டி முறையில் ஏற்பட்ட கோளாற்றால் அது புறப்படும் நேரம் 48 மணி நேரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பூமியைத் தவிர்த்து வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ முடியுமா எனும் கேள்விக்கு இதன்மூலம் விடை கிடைக்கலாம்.

Transit Exoplanet Survey என்று அழைக்கப்படும் அந்த செயற்கைக்கோளின் பயணம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

337 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் அந்த ஆய்வு. வானியல் முயற்சிகளில் புதிதாகக் கருதப்படுகிறது.
 

உங்கள் கருத்து

Top