Images
  • nasa1
    (படம்:www.nasa.gov)

விண்வெளியில் இருந்து காட்டுத் தீயைப் படம் எடுத்த வீரர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள மெண்டோசினோ (Mendocino) பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவிவருகிறது.

அதை அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் படமெடுத்தனர்.


அந்தப் படங்கள் NASA இணையவாசலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவும் பகலுமாக போராடிவருகின்றனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்தக் காட்டுத் தீ ஆக மோசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டு தீயால் கிட்டத்தட்ட 300,000 ஏக்கர் நிலம் நாசமாகி விட்டது. 

Top