Images
  • sputnik v
    (கோப்புப் படம்: REUTERS/Shamil Zhumatov)

COVID-19: மூக்கினுள் தெளிக்கக்கூடிய தடுப்புமருந்து... சோதனைக் கட்டத்தில் உள்ளது ரஷ்யா

ரஷ்யா, அதன் Sputnik V தடுப்புமருந்தை, மூக்கினுள் தெளிக்கக்கூடிய ஒன்றாக உருவாக்கி வருகிறது.

பெரியவர்களிடையே அது இப்போது சோதிக்கப்பட்டு வருகிறது.

மூக்கினுள் தெளிக்கக்கூடிய அந்தத் தடுப்புமருந்தை இரு முறை அளிக்கவேண்டும். ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) மருந்தகத்தில் அது சோதிக்கப்படுகிறது.

அத்தகைய தடுப்புமருந்து, 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்குப் பொருத்தமான ஒன்று என ரஷ்ய அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தனர்.
 

Top