Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"Black Lives Matter" என்ற முழக்கவரி NBA கூடைப்பந்தாட்டத் திடல்களில் சேர்க்கப்படும்

அமெரிக்காவின் NBA விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், கூடைப்பந்தாட்டத் திடல்களில் "Black Lives Matter" என்ற  முழக்கவரியை வண்ணத்தில் வரைய சம்மதித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
"Black Lives Matter" என்ற முழக்கவரி NBA கூடைப்பந்தாட்டத் திடல்களில் சேர்க்கப்படும்

(படம்: AFP/Angela Weiss)

அமெரிக்காவின் NBA விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், கூடைப்பந்தாட்டத் திடல்களில் "Black Lives Matter" என்ற முழக்கவரியை வண்ணத்தில் வரைய சம்மதித்துள்ளனர்.

கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட் (George Floyd) காவல்துறை அதிகாரிகளால் மாண்டதைத் தொடர்ந்து NBA விளையாட்டுப் பிரபலங்கள் இனவாதத்திற்கு எதிராகப் பெரிய அளவில் குரல்கொடுத்துள்ளனர். 

NBA, National Basketball Players Association ஆகிய அமைப்புகள் அந்த முழக்கவரியை ஒர்லாண்டோவில் உள்ள Disney World-இல் மூன்று கூடைப்பந்தாட்டத் திடல்களில் வரையத் திட்டமிடுகின்றன. 

மேலும் அந்த முழக்கவரி, கூடைப்பந்தாட்டத் திடல்களின் விளையாட்டுப் புள்ளிகள் காட்சிக்கு வைக்கப்படும் இடத்திலும், ஒளிபரப்புக் கூடத்திலும் சேர்க்கப்படும்.

விளையாட்டாளர்கள் சமூக ஒற்றுமையை ஆதரிக்கவும், இனவாதத்தை எதிர்க்கும் செய்திகளைக் கொண்ட ஆடைகளை அணியவும் NBA அனுமதித்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவலினால் தாமதமடைந்த 2019-2020 விளையாட்டுப் பருவம், தற்போது மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்