Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

7 மாதத்தில் 14 மலைச் சிகரங்கள் - நேபாள மலையேரி சாதனை

உலகில் உள்ள அதிக உயரம் கொண்ட 14 மலைச் சிகரங்களை 7 மாதத்தில ஏறி சாதனைப் படைத்துள்ளார் நேபாள மலையேரி நிர்மல் பூர்ஜா.

வாசிப்புநேரம் -
7 மாதத்தில் 14 மலைச் சிகரங்கள் - நேபாள மலையேரி சாதனை

படம்: Facebook@NimsPurja

உலகில் உள்ள அதிக உயரம் கொண்ட 14 மலைச் சிகரங்களை 7 மாதத்தில ஏறி சாதனைப் படைத்துள்ளார் நேபாள மலையேரி நிர்மல் பூர்ஜா.

36 வயது நிர்மல் 8,000 மீட்டர் உயரம் கொண்ட சிகரங்களை ஏற கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினார்.

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து அந்த சாதனைப் பயணத்தை அவர் ஆரம்பித்தார்.

தனது சாதனை இளையர்களுக்கு மலையேறுதல் மீது ஆர்வத்தை உருவாக்கும் என்றும் வருங்காலத்தில் அவர்கள் தனது சாதனைகளை முறியடிப்பார்கள் என்றும் நிர்மல் கூறினார்.

உயரமான சிகரங்களை கொண்ட நேபாளில் திறமையான பல மலையேறிகள் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நிர்மல் 2017ஆம் ஆண்டு ஏவரஸ்ட், ஹோட்ஸ் மலைச் சிகரங்களை 10 மணி நேரம் 15 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்