Images
  • nepal plane crash
    (படம்: AP/Niranjan Shreshta)

நேப்பாளத்தில் பங்களாதேஷ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 40 பேர் மரணம்

பங்களாதேஷ் விமானம் ஒன்று நேப்பாளத்தில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 40 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்டோருக்குக் காயம்.


(US-Bangla Airlines) யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் டாக்காவிலிருந்து நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுக்குச் சென்றுகொண்டிருந்தது.


விமானத்தில் 67 பேர் இருந்தனர்.

விமான நிலையத்துக்கு அருகே இருந்த காற்பந்துத் திடலில் விமானம் விழுந்து நொறுங்கியது.

 

Top