Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜோர்தானிய மன்னர் இஸ்ரேலியப் பிரதமர் சந்திப்பு

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு, ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜோர்தானிய மன்னர் இஸ்ரேலியப் பிரதமர் சந்திப்பு

(கோப்புப் படம்: AFP/RONEN ZVULUN)

இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு, ஜோர்தானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தடைபட்டுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதித் திட்டம், ஜெருசலம் விவகாரம் ஆகியவை குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு திரு. நெட்டன்யாஹு ஜோர்தான் சென்றது இதுவே முதன்முறை.

ஜோர்தானும், எகிப்தும் மட்டுமே இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள அரேபிய நாடுகள்.

ஜோர்தானிய மன்னர் தனிப் பாலஸ்தீனம் உருவாவது குறித்து வலியுறுத்தியதாக அரண்மனைத் தகவல்கள் கூறின.

வட்டாரத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட அதுவே சிறந்த வழி என்று இஸ்ரேலியப் பிரதமரிடம் மன்னர் அப்துல்லா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்