Images
  • netflix
    (படம்: Reuters)

COVID-19: முடக்கப்பட்டுள்ள இந்தியாவில் அதிகரிக்கும் இணையப் பயன்பாட்டை ஈடுகட்ட Netflix, Facebook முயற்சி

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முடக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலிருப்போர் பொழுதுபோக்குக்காக Netflix, Facebook போன்ற சேவைகளை அதிகம் நாடுகின்றனர்.

அதனால் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் அளவுக்கு மீறிய புழக்கத்தை எதிர்நோக்குகின்றன.

இத்தகைய சூழலில், Netflixஉம் Facebookஉம் இந்தியாவில் அவற்றின் இணையச் சேவைகளின் வேகத்தைக் குறைக்கவுள்ளன.

அடுத்த 30 நாள்களில் Netflix 25 முதல் 30 விழுக்காடு விழுக்காடு வரை வேகத்தைக் குறைத்துக்கொள்ளும்.

இத்தகைய நடவடிக்கைகளை அது ஏற்கனவே ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் வேகத்தைக் குறைப்பது, காணொளி மற்றும் படங்களின் தெளிவைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை Facebook மேற்கொள்ளும்.

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 21 நாள்களுக்கு இந்தியா முற்றிலுமாக முடக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
 

Top