Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நெதர்லந்தில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் - அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடிகள்

நெதர்லந்தின் யுட்ரெக்ட் (Utrecht) நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
நெதர்லந்தில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் - அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கொடிகள்

படம்: REUTERS

நெதர்லந்தின் யுட்ரெக்ட் (Utrecht) நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

டிராம் வண்டியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐவர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணத்தை உறுதிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இதுவரை இல்லையென்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

அது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கும் சாத்தியத்தை இன்னும் நிராகரிப்பதற்கில்லை என்று பிரதமர் மார்க் ருட்டே குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்