Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிமையைப் போக்க உதவும் பேரங்காடி

தனிமை, இன்றைய சூழலில் உலகெங்கும் அதிகரித்துவரும் ஒரு பொதுச் சுகாதாரச் சிக்கல்.

வாசிப்புநேரம் -
தனிமையைப் போக்க உதவும் பேரங்காடி

(படம்: Pixabay)


தனிமை, இன்றைய சூழலில் உலகெங்கும் அதிகரித்துவரும் ஒரு பொதுச் சுகாதாரச் சிக்கல்.

வாழ்க்கைத் துணையின் மறைவு, பிள்ளைகள் வெகுதொலைவுக்குப் புலம்பெயர்ந்தது போன்றவை பெரும்பாலோரின் தனிமைக்குக் காரணங்கள்.

அத்தகையோருக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளது நெதர்லந்தின் ஆம்ஸ்டர்டாம்நகரப் பேரங்காடி ஒன்று.

மளிகைப் பொருள் வாங்கப் பேரங்காடிக்குச் செல்வதை சாதாரணமான, சுவாரசியமற்ற செயலாகப் பலர் கருதலாம்.

ஆனால், நண்பர்களைப் பார்க்கவும், நகைச்சுவையாய்ப் பேசவும், சேர்ந்து காப்பி அருந்தவும் கிடைக்கும் சிறந்த வாய்ப்பு அது.

காரணம் Jumbo பேரங்காடி முன்னெடுத்துச் செல்லும் சில திட்டங்கள்.

காசாளரிடம் அவசர அவசரமாகப் பணம் செலுத்தி பொருள்களை வாங்கத் தேவையில்லை.

நின்று நிதானமாக உரையாடலாம்.

முன்னோடித் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து தனது 60 கிளைகளிலும் அதனைச் செயல்படுத்த எண்ணங்கொண்டுள்ளது Jumbo.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்