Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வயதுப் பெண் மரணம்

நீர்ச்சத்துக் குறைப்பாடு, அதிர்ச்சி ஆகியவை காரணமாக அந்தப் பெண் மாண்டிருக்கலாம் என்று அமெரிக்கக் குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்பு அமைப்பை மேற்கோள்காட்டி, நாளேடு குறிப்பிட்டது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வயதுப் பெண் மரணம்

(படம்:AFP)

நியூமெக்சிக்கோ மாநிலத்தில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வயதுப் பெண் மாண்டு விட்டதாக The Washington Post நாளேடு குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பெண் மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலாவைச் சேர்ந்தவர்.

நீர்ச்சத்துக் குறைப்பாடு, அதிர்ச்சி ஆகியவை காரணமாக அந்தப் பெண் மாண்டிருக்கலாம் என்று அமெரிக்கக் குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்பு அமைப்பை மேற்கோள்காட்டி, நாளேடு குறிப்பிட்டது.

அந்தப் பெண் தனது தந்தையுடனும், மேலும் 12 பேருடனும் சட்ட விரோதமாக மெக்சிக்கோ எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர். .

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையான குழுநுழைவுக் கொள்கைகளை விதித்திருக்கிறார்.

அதிபர் டிரம்ப் மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பப்போவதாகவும் சூளுரைத்திருந்தார்.

சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் பெற்றோரிடமிருந்து இதுவரை ஈராயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் ஆதாயத்துக்காக குடியேறிகளைப் பணையம் வைக்கிறார் என்ற குறைகூறல் அவர் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டுவருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்