Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க சுற்றுலாத் தலத்தில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க சுற்றுலாத் தலத்தில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் காயம்

(படம்: Max Becherer/The Times-Picayune/The New Orleans Advocate via AP)


அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.

அங்கு ஹோட்டல்களும், கடைத் தொகுதிகளும் அமைந்திருப்பதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.

என்ன காரணத்துக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றியும் தெளிவாகத் தெரியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்